You can get a lot more done with a kind word and a gun than with a kind word alone
- Al Capone
ஓநாய் மனிதர்கள்......
நீங்கள் யாராகவும் இருக்கலாம் .. ஒரு சுய தொழில் அதிபராகவோ அல்லது ஒரு பெரிய பாஸ் ஆகவோ இருக்கலாம். வாழ்வில் முன்னேர்வதும், உயர்வில் தாக்கு பிடிப்பதும் ஒரு குதிரை கொம்போ அல்லது கழுதை கொம்பாகவே இருந்து வருகிறது. இது சும்மா வாழ்ந்து மடிவோற்கு பொருந்தாது .இது ஒரு தங்க புதையல் நண்பர்களே !( அதிகாரமும் தோரணையும் பின்னே
செல்வமும் கலந்து வருவது ) குறிக்கோள் கொண்ட ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஒரு காட்டு ஓநாய் போல அறிவு தேடி ஏற்கனவே மாபெரும் வெற்றி பெற்ற மனிதர்களின் பின்னே ஓடி வருவார்கள். இந்த பிளாக்கர் இத்தகைய அறிவை கொடுக்கும்.
காந்தியவாதிகளும், இளையராஜாவின் இசை கேட்டு கண்ணீர் சொரிபவர்களும், ஜாதகத்தை நக்கி கொண்டு இருப்பவர்களுக்கும் ஒரு காயடிக்கும் பைபிள் இது என்பேன்.
வெற்றியின் பரம ரகசியத்தை இப்படி சொல்ல முயற்சிக்கிறேன் .முதலில் ஒரு நாலு பேரை மேய்க்கிற மாதிரி சின்ன இடத்தை அடையவேண்டும் ( இதுவே பெரிய கடினம் )அப்பன் ஆத்தா சொத்து சேர்த்து வைக்காத ஒரு சராசரி மனிதன் ( தமிழனோ தெலுங்கனோ மலையாளியோ அல்லது பொதுவாய் இந்தியனோ எவனோ ) பாரம்பரிய செல்வம் இல்லாதவனும் ( இந்திய பெரும் அரசியல்வாதிகளின் வாரிசுகளை போல ) ஆகிய ஒருவன் மற்றவர்களை காட்டிலும் அதிபுத்திசாலியாகவும் சீரிய குறிக்கோள் கொண்டவனுமாகவும் மற்ற சக மனிதர்களைவிட அதிக
ஊக்கம் இருப்பவனுமாகவும் இருத்தல் வேண்டும். மேலும் அதிர்ஷ்டக்காரனாகவும்,
வெறிகொண்ட கருணை இல்லாதவனாகவும் இரு .(மீண்டும் ஜாதகம் நினைவில் வந்தால் வருத்தபடு) ஓநாய் மாதிரி ஊளை விடவேண்டும் என்றல் ஓநாய்களுடன் அலைந்து திரிய வேண்டும்.
அந்த சின்ன இடத்தை பெற்ற பிறகும், எதிரிகளின் தாக்குதல்களிலிருந்து தப்பியும் நீ பெற்றுவிட்ட இடத்தை தக்கவைத்து கொள்ள வேண்டும் .அந்த சின்ன இடத்தை ஒவ்வொரு நாளும் போலிஷ் செய்து மேன்மை படுத்த வேண்டும். இந்த சின்ன இடத்திற்கு பதவிக்கு கூட போட்டியும் பொறாமையும் காணும். ஏன் எனில் இந்த சின்ன பதவி அவனுக்கு பெரும் சுகம் , விலை மதிப்பில்லாத வாய்ப்புகள் அளிக்க கூடியது. எனவே இதை தக்க வைத்துகொள்ள போராட வேண்டும் (மீண்டும் வெறிகொண்ட கருணை இல்லாதவனாக )
---------ஓநாய் தொடர்ந்து ஊளையிடும்..